யாழில் ஊடகவியலாளரின் 12 வயது மகன் மீது தாக்குதல்!!

பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் செய்தியறிக்கையிட்டு வந்தமைக்காக தனது மகன்தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்.
உன்னை அடித்து கொலைசெய்து குளத்தில் போட்டுவிடுவோம் என்றும் உனது அப்பா கமராவ தூக்கிட்டு வந்து செய்தி எடுப்பார் என்றும் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். எனவும் தெரிவித்த குறித்த ஊடகவியலாளர்
தான் இது தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் ஊடகவியலாளர்களின் சுதந்திரமாக செயற்பாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலானது. இது தொடர்பில் பொலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஊடகவியலாளரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

error

Enjoy this blog? Please spread the word :)