
வெளிநாடுகளில் எங்கட தமிழ் ஆக்களை “டக்கெண்டு ” கண்டுபிடிக்க சில எளிய வழிகள்:

சுப்பர் மாக்கற்றில் மனிசி முன்னால போக பின்னால வண்டிலை தள்ளிக்கொண்டு புருசன் போனால் அவை “தமிழ்”!

கவுண்டரில ஆர் காசு குடுக்கிறது எண்டு புருசனும் பொஞ்சாதியும் confused ஆகி நிண்டா அவை “தமிழ்”!

taste பாக்குற சாட்டில கால் கிலோ திராட்சைப்பழத்தை(grapes) களவா எடுத்து திண்டால் அவை “தமிழ்”!

வெண்டிக்காய், முருங்கக்காய் போன்றவற்றை முறிச்சும் வெங்காயத்தை “தெரிஞ்சு” பாத்தும் வாங்கினா அவை “தமிழ்”!

கார் பாக்கிங்கில பத்து நிமிசமா காத்து நிக்கிறவனை overtake பண்ணி ;
சுழிச்சு நெழிச்சு park பண்ணிட்டு போகும் போது … வெள்ளைக்காரன் கேவலமாக தூசணத்தால் ஏசுவான்.
அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிரிச்சுக்கொண்டே போனால் அவை “தமிழ்”!

கோயில்லை செருப்பை களவெடுத்து போடுவாங்கள் எண்டு “ஒழிச்சு” வைச்சால் அவை கண்டிப்பா “தமிழ்”!


கோயில்லை அன்னதானத்துக்கு ரண்டு கோப்பையோட நிண்டா அவை”தமிழ்”!

சைனா காரண்ட சாப்பாட்டுக்கடைக்குப்போய் பக்கத்து மேசையில எவன் என்ன தின்னுறான் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால் அவை “தமிழ்”!

Menu card ஐ பார்த்து order குடுக்காமல் அடுத்தவன்ர table ஐ காட்டி ஓடர் குடுத்தா அவை “தமிழ்”!

சைனா காரன்ர சாப்பாட்டு கடையில “அப்பளம்” இருக்கோ எண்டு கேட்டா அவை “தமிழ்”!

சொப்பிங் சென்றரில் அக்கம் பக்கம் பாராமல் எட்டு கட்டைக்கு கேக்குறமாதிரி ரெலிபோன் கதைச்சா அவை “தமிழ்”!
கபாலி படத்துக்கு போகும் போது வாங்கின popcorn

கவருக்குள்ள வீட்டில பொரிச்ச popcorn ஐ சிங்கம் -3 இக்கும் கொண்டு போனா அவை “தமிழ்”!
“அண்ணை கொஞ்சம் காசை உள்ள தள்ளி லைசென்ஸ் எடுத்துதரமாட்டியளோ?”எண்டு கேட்டால் அவை “தமிழ்”!
கடைசியா ஒரு ஆலோசனை!


Address அனுப்பியும் ஆறாம் நம்பர் வீடா ? எட்டாம் நம்பர் வீடா ? எண்டு confuse ஆகும். எட்டிப்பாருங்கோ செருப்பு வாசலில கிடந்தா அவை “தமிழ்”!
இது ஒரு பேஸ்புக் பதிவு…….