புதினங்களின் சங்கமம்

நல்லுார் பிரதேசபை செயலாளரை தாக்கிய மாநகரசபை சாரதியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஆணையாளர்!!

யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் பிரதி ஆணையாளர் சீராளன் ஆகியோரின் செயற்பாடுகள் மிகவும் அசிங்கத்தனமானவையாக உள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் உட்பட அதிகாரிகள் தரப்பிலும் விசனங்கள் வெளிவந்துள்ளன.

யாழ் மாநகரசபையில் சுகாதாரப்பகுதியில் உழவு இயந்திரச் சாரதியாக உள்ள நல்லுார் அரசடிப்பகுதியைச் சேர்ந்த துர்க்கா என்று புனை பெயரில் அழைக்கப்படும் மீற்றர் வட்டிக்காரனும் ஐ.தே.க கட்சியின் விஜயகலாவின் அடியாளுமாக உள்ளவனுடன் யாழ் மாநகரசபை ஆணையாளர் கூடிக் குலாவி செல்பி எடுக்குடும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

குறித்த துர்க்கா யாழ் மாநகரசபையின் கண்ணியமிக்க சாரதி என்றால் அவனுடன் நெருக்கமாக செல்பி எடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அவன் எப்படியானவன் என அங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். சேற்றுப் பன்றியைக் கண்டால் விலகி ஓடுவது போல அவனைக் கண்டால் அங்கு வேலை செய்யும் அலுவலர்கள் விலகிவிடுவார்கள். எந்த அலுவலரையும் மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களால் ஏசுவதுடன் அவர்களை தாக்குவதற்கும் பல தடவை முயன்றவன். இவனுடன் கூடச் சேர்பவர்களில் பலர் இவனிடம் மீற்றர் வட்டிக்குப் பணம் வாங்கி கட்டமுடியாமல் திண்டாடுபவர்களே….

யாழ் மாநகரசபையில் உழவு இயந்திரச்சாரதியாக கடமையாற்றிய இவன் தனக்கு கால் இயலாது என கூறி பொய் மருத்துவச் சான்றிதழ் எடுத்து எந்தவித வேலையும் செய்யாது அலுவலகத்துக்கு வந்து கையொப்பம் இட்ட பின் மாயாமாகிவிடுவான். இவனது செயற்பாட்டைத் தட்டிக் கேட்க முற்பட்ட பெண் தொழிற்நுட்ப உத்தியோகத்தரை பலருக்கு முன்னால் மிகக் கேவலமாக ஏசியதால் குறித்த உத்தியோகத்தர் தற்கொலைக்கும் முயன்ற சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இந் நிலையிலும் அவனு்ககு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டார் யாழ் மாநகரசபை ஆணையாளர். காரணம் அவன் ஐ.தே.க கட்சியின் அடியாள் என்பதாலேயே. அந் நேரம் யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த யோகேஸ்வரியுடனும் இவன் நெருங்கிப்பழகியிருந்ததுடன் அவரது காலத்தில் ஆணையாளராக இருந்த பிரணவநாதனால் இவன் முறைதவறி மேற்பார்வையாளராகவும் பதவி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகரசபைக்கு வரும் ஆணையாளர்களை இவன் எவ்வாறு தனது வசப்படுத்துகின்றான் என்பது ஒரு சிலருக்கே தெரிந்த உண்மையாகும். இவ்வாறான நிலையில் யாழ் மாநகரசபையில் காலையில் கையொப்பம் இட்டு வழமை போல் தனது தண்டல் வேலைகளுக்காக சென்ற இவன் நல்லுார் பிரதேசசபை செயலாளருக்கு அவரது அலுவலகத்தில் புகுந்து கடமை நேரத்திலேயே தாக்கி பாரதுாரமான குற்றத்தை செய்திருந்தான். இவ்வாறான நிலையில் நல்லுார் பிரதேசசெயலாளர் கடும் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது யாழ் மாநகரசபை ஆணையாளர் குறித்த சாரதிக்கு ஆதரவாக செயற்பட முற்பட்டார்.

அதாவது துர்க்கா யாழ் மாநகரசபையில் கையொப்பம் இட்டுவிட்டு நல்லுார் பிரதேசசபையில் போய் செயலாளரை தாக்கிய விடயத்தை மறைப்பதற்காக அவனது விரல்ரேகைப் பதிவை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முற்பட்ட போது அவை வெளியே கசிந்ததால் அந் நடவடிக்கையை நிறுத்தினார். அதன் பின்னர் நீதிமன்றில் வழக்கு சென்ற பின்னரே அவனை தற்போது வேலைக்கு வராது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. குற்றச் சந்தேக நபர் ஒருவருடன் யாழ் மாநகரசபை ஆணையாளர் கூடிக் குலாவி செல்பி எடுப்பது எதற்காக என்பதை பலரும் சந்தேகிக்கின்றார்கள்.

சிலவேளை தனது மனைவி, பிள்ளைகளைப் பற்றி சாரதி துர்க்கா தவறாக கதைத்துவிடுவானோ என்ற அச்சத்திலா? அல்லது தன்னுடன் நிற்பது தனக்கு ஆணையாளர் பதவி வாங்கித்தந்தவரின் மனைவியான விசயகலா மற்றும் அவர்களது அடியாட்கள் என்ற சந்தோசத்திலா??

அல்லது துா்க்காவிடம் பெருமளவு பணத்துக்கு வட்டி வாங்கி கட்ட முடியாமல் இருப்பதாலோ?? அல்லுது இவ்வாறான ரவுடிகளை தன்வசம் வைத்திருந்தால் எதிர்காலத்தில் தானும் அரசியலுக்கு வரமுடியும் என்ற காரணத்திலா??

என தெரியாது பலரும் ஆணையாளரின் நடவக்கை தொடர்பாக ஆராயத் தொடங்கியுள்ளார்கள்.

பேஸ்புக்கில் விசர்த்தனமான கவிதைகளை எழுதி அதற்கு எத்தனை லைக்குகள் விழுகின்றது என்ற சந்தோசக் களிப்பில் இருக்கும் இவ்வாறான ஆணையாளர்கள் இருக்கும் வரை யாழ் மாநகரசபையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

குறிப்பு – யாழ் மாநகரபை பிரதி ஆணையாளர் சீராளனின் காமலீலைகள் தொடர்பாக அறிந்த அவருடன் நெருக்கமாக இருந்த பீயோன் மனோகரன் தற்போது எங்கே?? வெகுவிரைவில் இவை வெளிப்படும்……..

Image may contain: 10 people, people standing and outdoorImage may contain: 10 people, including Sankarraj A and Jeyaseelan Thanabalasingham, people standing and outdoor