பதவி இழக்கிறார் யாழ்.மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட்! வரவு – செலவுத்திட்டம் மீண்டும் தோல்வி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
இதனால் யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் தேற்கடிக்கப்பட்டதன் காரனமாக இன்றைய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

