கொரோனா தொற்று பரவல் இலங்கையை வெகுவாக பாதித்து வரும் நிலையில் மறு அறிவித்தல் வரும்வரை சில இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு மருதானை மற்றும் தெமட்டகொட காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட இடங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பயகல, பேருவளை மற்றும் அளுத்கம காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.





