யாழில் எண்ணப்படும் வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது!! ஈ.பி.டி.பி, அங்கஜன் அணி முன்னிலையில்…
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஊர்காவற்றுறையில் தொகுதிக்காக எண்ணப்பட்டுவருகின்ற வாக்குகளின் எண்ணிக்கையில் ஈபிடிபி கட்சியினருக்கான வாக்குகள் ஏனைய கட்சிகளை விட அதிக அளவில் காணப்பட்டுவருவதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் ஆறாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஈபிடிபி கட்சி முதல் இடத்திலும் 4000 வாக்குகளை அண்மித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாம் இடத்திலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2000 வாக்குகளை அண்மித்த வாக்குகளுடனும் காணப்படுவதாக வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் அண்ணளவாக சராசரியான வாக்குகளுடன் காணப்படுவதாக தெரியவருகிறது.
குறிப்பு
மேலே குறிப்பிட்ட தகவல்கள் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் ஊாடக கிடைக்கப்பெற்ற தகவல்கள் இல்லை
முழுமையான தேர்தல் அறிவுப்பகளை உடனுக்குடன் தருவோம். தொடர்ந்து காத்திருங்கள்…
இதே வேளை
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள தேர்தல் மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.
இன்று (06) காலை 7 மணிக்கு ஊர்காவற்றுறை மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளின் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணியும் அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகியது.
யாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் 16 தபால்மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகளை எண்ணும் பணி இடம்பெறுகிறது.
யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.
வாக்கெண்ணும் நிலைய இலக்கம் 82 இன் முடிவுகளின்படி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2592
சந்திரகுமார் (கேடயம்) – 1001
ஈபிடிபி – 289
தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 268
வாக்கெண்ணும் நிலைய இலக்கம் 75
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1859
சந்திரகுமார் (கேடயம்) 897
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 206
ஈபிடிபி 105

