புதினங்களின் சங்கமம்

யாழ். பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து! (படங்கள்)

யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில் எதிரே வந்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொாடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.