புதினங்களின் சங்கமம்

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று இரவு காலமானார்.

தனது வீட்டில் தவறி வீழ்ந்த அவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய தகவலின் படி மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட அவர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

1964 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 56 வயதில் காலமானார்