இலங்கையில் வெகு வேகமாகப் பரவவுள்ளது கொரோனா!! ஊரடங்கு தளர்த்தபடாது தொடரவுள்ளது!!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!
இலங்கையில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எனவே குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான கடுமையான சில நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இடைக்கிடையே தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை உடன் நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளையும் இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

