புதினங்களின் சங்கமம்

டயலொக் நிறுவனம் செய்யும் திருவிளையாடல்!! வாடிக்கையாளர்களிடம் கொரோனா நேரத்திலும் கொள்ளை!!

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாவும் நோய்க்கு இலக்காகிப் பலியானார்!!

டயலொக் நிறுவனம் தற்போது பெரும் கேவலமான செயற்பாட்டை தனது வாடிக்கையாளர்கள் மீது மேற்கொண்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறித்த நிறுவனத்தின் றவுட்டர்களை வாங்கி இணைய இணைப்புக்களை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு டயலொக் நிறுவனம் திருவிளையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. டயலொக் றவுட்டர்கள் தற்போது பெருமளவான சந்தர்ப்பத்தில் தொழிற்படாது விடுவதுடன் சில நேரங்களில் மிகவும் வேகம் குறைந்தே இணைய சேவையை செய்கின்றது. டயலொக் றவுட்டர்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் டேட்டாக்கள் விலை குறைவாக இருப்பதால் டயலொக் நிறுவனம் கைத்தொலைபேசி டேட்டாக்களை வாடிக்கையாளர்கள் விலைகூடவாகப் பெற்று பயன்படுத்துவதற்கே இந்தத் திருவிளையாடல்களை டயலொக் நிறுவனம் மேற்கொள்ளுவதாக அதிர்ச்சித் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த டயலொக் நிறுவனத்திற்கு  யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியைச் சேர்ந்தவர்களே பெருமளவான வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும் அத்துடன் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பணவசதி கொண்டவர்கள் என அறிந்த டயலொக் இவ்வாறான திருவிளையாடல்களை மேற்கொண்டு வடபகுதி மக்களின் பணத்தை சுரண்டி வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பெரும் விசனம் வாடிக்கையாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தின் சேவையை வடபகுதி வாடிக்கையாளர்கள் நிறுத்தி வேறு நிறுவனங்களின் சேவையைப் பெறுவதற்கு முயன்று வருவதாகவும் அறிய வருகின்றது.

இதே வேளை டயலொக் வாடிக்கையாளர் சேவையை பெற முடியாதவாறு அந்த நிறுவனம் முடக்கி வைத்துக் கொண்டு தன்னியக்க பதில்களையே வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.