புதினங்களின் சங்கமம்

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் நடந்த மெய்சிலிர்க்கும் சம்பவம்!!

மகன் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறி மூதாட்டியின் சங்கிலியை அபகாித்து சென்ற நபா் அதே இடத்தில் மீண்டும் ஒருவரை ஏமாற்றுவதற்காக காத்திருந்த நிலையில் மூதாட்டியினால் அடையாளம் காணப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்துக்காக அச்சுவேலியிலிருந்து மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரை உடனடியாக அறிவித்தல் பந்தலுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு சென்றபோது, அங்கு நின்ற ஒருவர் மூதாட்டியின் மகன் விபத்தில் சிக்கி காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவச் செலவுக்கு பணம் தர வேண்டும் என்று அங்கு நின்ற ஒருவர் கேட்டுள்ளார். மகன் விபத்தில் சிக்கினார் என்ற பதற்றத்தில் பணம் இல்லையெனக் கூறி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்துள்ளார்.

சங்கிலியை வாங்கியவர் அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த மகன் சம்பவத்தை அறிந்து அம்பாளுக்கு நெர்த்தி வைத்துச் சென்றுள்ளார்

பங்குனித் திங்கள் நான்காம் திங்களான நேற்று மூதாட்டியும் மகனும் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில் சங்கிலியை வாங்கிய நபர் அங்கு நின்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மூதாட்டி மகனிடம் கூறியுள்ளார்.

மகன் அந்த நபரைப் பிடித்து அங்குள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் மூதாட்டியிடம் சங்கிலியை வாங்கியதை அந்த நபர் ஒப்புக் கொண்டார் என்றும், அதையடுத்துப் பொலிஸார் அந்த நபரைப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.