கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும் ஜேர்மன் வாழ் யாழ்ப்பாணத்துக் குடும்பங்கள்

கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் மனிதர்களை வேகமாக வேட்டையாடி வருகின்றது.

இதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் வைத்தியர்கள் போராடி வருகின்றனர்.

பொது மக்கள் பீதியில் தம்மையும் தமது குடும்பத்தையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானிக்கப்படுவதுடன்இ அவர்கள் குறித்து இலங்கையிலிருக்கும் உறவினர்களும் அவதானிக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஜேர்மனில் சிங்கம் (Singham) வீதியில் சுமார் 20 பேருக்கு தொற்றி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜேர்மனில் சிங்கம் வீதியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பல குடுபங்கள் வசித்து வருகின்றார்கள்.

இவர்கள் கொரோனா பீதியில் இருப்பதுடன் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் உலர் உணவுப்பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் சேமித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பாடசாலைகளில் கல்வி கறகும் தமது குழந்தைகள் குறித்தும் இவர்கள் பொரும் பீதியில் உள்ளனர்.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா தமது குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுத்துள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் தமது உறவுகளுக்கு இது பரவாமல் இருக்க வேண்டும் என இலங்கையிலிருக்கும் உறவுகள் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

error

Enjoy this blog? Please spread the word :)