சினிமா

கோடி கணக்கில் பண மோசடி சிக்கிய லக்ஸ்மி ராமகிருஷ்ணன்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பல குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் நடிகை லக்ஸ்மி ராமகிருஷ்ணன். தற்பொழுது இவரையே மக்கள் பஞ்சாயத்துக்கு இழுக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது நகை கடை ஒன்று.

KFJ எனும் நகைக்கடையின் சேமிப்பு திட்டம் குறித்த விளம்பர படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்தார் நடிகை லக்ஸ்மி ராமக்ரிஷ்ணன். இந்நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் அண்மையில் திவாலானதாக கூறப்படுகிறது.

இந்நிறுவன நகை சேமிப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான பணத்தை மக்கள் செலுத்தி இருந்த நிலையில், தாங்கள் ஏமாந்ததை எண்ணி கலங்கிய மக்கள் பலரும்,

‘நீங்கள் நடித்ததால் தான் நம்பிக்கையான நிறுவனம் என எண்ணி நாங்கள் பணத்தை செலுத்தினோம். எங்கள் பணத்திற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்’ என நடிகையிடம் முறையிட துவங்கி இருக்கின்றனர்.