யாழிலிருந்து வவுனியாவுக்குப் பஸ்சில் போன பாட்டியின் திருவிளையாடல்!! மயங்கி விழுங்தார் நடத்துனர்!!
யாழ்ப்பாணத்லிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து..
பளை அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “கிளிநொச்சி வந்திட்டா?” என்று கேட்டார்.
“கிளிநொச்சியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”
“சரி”
ஆனையிறவு வந்தது.
“தம்பி.. கிளிநொச்சி வந்திடுச்சா?”
“அட.. இன்னும் இல்லைம்மா”
அம்மா மீண்டும் கிளிநொச்சி வந்திடுச்சா?”
“ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கிளிநொச்சி வந்தா நானே சொல்றேன்”
“சரி”
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து மாங்குளத்தை தாண்டிக் கொண்டிருந்தது.
“கண்டக்டர் தம்பி ..கிளிநொச்சி வந்திடுச்சா?” – தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்தில் இருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது. “பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புப்பா.. திரும்ப கிளிநொச்சிலையே கொண்டு போய் அந்தம்மா விட்டுட்டு திரும்பி வருவம்” என்றார்கள்.
கண்டக்டருக்கு வேறு வழி தெரியவில்லை. பேருந்தைத் திருப்பினார். வந்த வழியே கிளிநொச்சிக்குச் சென்றது.
ஒரு வழியாக சில மணி நேரங்களில் கிளிநொச்சி வந்தது. “அம்மா.. இறங்கும்மா” – சலித்தபடியே கண்டக்டர் கூறினார்.
சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் குளிசையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.
“என்னம்மா.கிளிநொச்சில இறங்கலையா?” – கண்டக்டர் கேட்டார்.
“நான் ஏன்டா தம்பி கிளிநொச்சில இறங்கணும்? கிளிநொச்சி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என்ர மகள் சொல்லி அனுப்பினான். அதான். நான் வவுனியா போகணும் ??
இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியதது ??
An old lady was traveling from Jaffna to Vavuniya After a while the lady asked the conductor whether they had reached Kilinochchi. He replied, no Amma still lot of time.
After some time when the bus stopped at a stop, the lady asked loudly if they had reached Kilinochchi. This went on three or four times. The conductor got annoyed and rudely replied, don’t shout at every stop. I will tell you when we reach your place.
The old lady was now satisfied that she would not miss her stop and dozed off. When she woke up they had reached Mankulam. She asked the conductor if they had crossed Kilinochchi. The conductor realised his folly and said apologetically that they had crossed Kilinochchi and reached Mankulam. He blamed her for sleeping and said she should have been alert. Now the old lady got really annoyed and made a ruckus saying, what nonsense, you told me you would tell me when we reached Kilinochchi and trusting you, I dozed off.
Soon the other passengers in the bus supported the old lady and asked the conductor to take back the bus to Kilinochchi for dropping the old lady. When the conductor felt the heat of all the passengers, he had no alternative but to return to Kilinochchi. He said, Amma we have reached Kilinochchi, get down fast. The lady stood up and took out her bag from the overhead carrier and took out a tablet and drank some water and sat down.
The conductor got furious and asked if she was getting down or not.
The old lady said, why should I get down here when I have to go to Vavuniya. My daughter had told me to take the BP tablet when the bus reached Kilinochchi. I have taken my tablet, now you can start the bus …
How about the conductor’s BP???? #

