இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.,,
இண்டைக்கு காலையில 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில இருந்து மன்னாருக்கு பஸ் ஏறி, அங்க போய் இரண்டு Team ஓட FGD-யும் முடிச்சிட்டு வெளிக்கிடேக்க நேரம் 3.20.
3.30 மணிக்கு மன்னார் – யாழ்ப்பாணம் பஸ்ஸை விட்டிடக்கூடாது எண்டு அறக்கப்பறக்க வெளிக்கிட்டு, ஓடி ஒருமாதிரி பஸ்ஸைப் பிடிச்சு, மூண்டு சீட் இருக்கிற சீட்டில கரையில போய் இருந்திட்டன்.
Window seat கிடைக்கேலையே எண்ட கவலைதான். இருந்தாலும் கிடைச்ச வரைக்கும் சந்தோசம் எண்டு, lap bag-ஐ மேல வச்சு அதில சாயலாம் எண்டு வெளிக்கிட்டா… அப்பதான் ஓடி வந்து ஒரு பெடியன் பஸ்ஸில ஏறினான்.
என்னைப் போலவே பஸ்ஸை மிஸ் பண்ணிடக்கூடாது எண்டு பதறியடிச்சு ஓடி வந்திருக்கிறான்.
வடிவா note பண்ணல தான். இருந்தாலும் பார்த்த வரைக்கும் சொல்லுறன்.😑
கறுப்பு denim jeans, white shirt with pink stripes, black shoes, கையில ஒரு black watch, black colour bag, கொஞ்சமா தாடி, காதில குட்டியா ஒரு Bluetooth.
அத விட என்னைப் போலவே கீழ ஒரு தெத்திப்பல்லு!😍
பார்த்தா எனக்கு opposite seat. சொல்லப்போனா, ஒரு சின்ன இடைவெளி விட்டு பக்கத்து seat. ரிக்கெட் எடுக்கேக்கை சாவகச்சேரி எண்டு சொன்னான்.
ஸ்ஸா… இண்டைக்கு பரவாயில்ல, பொழுது போயிடும் எண்டு ஒரு ஆனந்தம்!😆😁
அங்கால பஸ்ஸில ‘ஊதா ஊதா ஊதாப்பூ’ பாட்டு போகுது. அதுவும்,
“ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று,
என்னை நிலம் கேட்டதம்மா
உன் நிழல் எங்கு என்று?”
எனக்கு ரொம்பப் பிடிச்ச வரி. ✍🏼
அங்கால ஹரிகரன், ஹரிணி குரல்ல பாட்டு… இங்கால பக்கத்தில வடிவான பெடியன். பின்ன என்ன… சின்ராசைக் கையால பிடிக்கவா முடியும்?
அதிலயும் காலையில வீரன் தன்னைய அக்காட இரவல் dress இல அழகா வேற உணர்ந்திட்டான். (வீரன் எண்டு என்னைய தான் சொன்னன்.☺️)
யாருக்கும் தெரியாம (அவனுக்கே தெரியாம) பெடியனை சைட் அடிச்சுக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தன்.😋
அடுத்தது ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’, ‘உயிரே வா உறவே வா’ ‘வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘ காற்றே என் வாசல் வந்தாய்’… எண்டு தொடர்ந்து எல்லாம் காதல் இன்னிசை மழை! 🎶🌸❤️
அப்பிடியே கொஞ்ச நேரம் போயிட்டு. இருந்தாப்போல பெடியன் தன்ர போனில கைரேகையை வச்சு ஒரு தட்டு தட்டினான். அது YouTube channel உள்ள போயிட்டு.
பார்த்தா வீடியோல ஒருத்தன் நிண்டு கையைக் குறுக்கையும் மறுக்கையும் ஆட்டிக்கொண்டு RAP பாடுறான். அதைத்தான் இவன் காதில அந்தக் கறுப்பு headset-ஐப் போட்டுக்கொண்டு கேட்டுக்கொண்டு வந்திருக்கிறான்.
ஒரே கவலையாப் போச்சுது!😕
இங்கால எவ்வளவு நல்ல பாட்டெல்லாம் போகுது… இவன் என்னடா எண்டா RAP கேட்டுக்கொண்டு வாரான்! Original 2k kids ஆ இருப்பான்.
நான் எல்லாம் love பண்ண மட்டும் இல்ல, sight அடிக்கக்கூட taste ஒத்துப்போகுதா எண்டு பாப்பன்!😒
தெத்திப்பல்லைப் பார்த்த நான், பெடியன்ர மூஞ்சிய வடிவாப் பார்க்கவே இல்லை. அது உண்மையிலேயே குழந்தை. Gen Z-யின் கடைசித் தலைமுறையில ஒண்டா இருக்கும். 🫡
ஒரே sad-ஆப் போயிட்டு. அதுக்குப் பிறகு அங்கால பக்கமே திரும்பேல. புல்லையும் மரத்தையும் எட்டிப் பார்த்துக்கொண்டு வந்திட்டன்.😏
இருந்தாலும் சைட் அடிக்கிறதுக்கு வயசு எல்லாம் பிரச்சனை இல்ல எண்டு மனச தேத்திட்டு வந்திட்டன்.🫢😎
பிறகு முன்னால இருந்த ஒரு அண்ணா எழும்பிப் போக, அவர் இருந்த window seat-ஐப் போய் ஒருமாதிரி பிடிச்சிட்டன்.
பிறகென்ன வழமை போல இயற்கைய ரசிச்சிட்டு வந்திட்டன்.😶🌫️
இதில main விஷயம் என்ன எண்டா, அந்த RAP song-க்குக் கீழே YouTube feed-ல Dilakshan Theri அண்ணாட ஒரு ஆட்டோ வீடியோ thumbnail தெரிஞ்சுது!
அப்பதான் அண்ணாட ஒரு வெறியன் போல follow பண்ணி வச்சிருக்கான் எண்டு யோசிச்சுக்கொண்டு வந்தன்.
நடந்ததில இது ஒண்டு தான் மகிழ்ச்சியான விஷயம்!🫠
இன்றைய நாள் இப்பிடியே முடிஞ்சுது. 😌
மினக்கட்டு இருந்து கடைசி வரைக்கும் வாசிச்ச எல்லாருக்கும் நன்றி!
பிறகென்ன அவன் சாவகச்சேரில இறங்கிட்டான். இத ரைப் பண்ணிக்கொண்டே நானும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திட்டன். அவ்வளவு தான் 🙋🏻♀️
சிறு நெடுந்தூரப் பயணங்களும் அதனூடான நினைவுகளும்🍃❤️
பி.கு: இது AI வெள்ளையாக்கி தந்த படம். ஆனா நாங்க எல்லாம் கறுப்பா இருந்தாலும் கலையான பிள்ளையல். உண்மைக்கும் விடிய வடிவா இருந்தனான்🌝🖤





