Home புதினங்களின் சங்கமம் விவாகரத்து தீர்ப்புக்காக லஞ்சம் பெற்ற நீதிபதியும் மனைவியும் பிடிபட்டது எப்படி?

விவாகரத்து தீர்ப்புக்காக லஞ்சம் பெற்ற நீதிபதியும் மனைவியும் பிடிபட்டது எப்படி?

விவாகரத்துத் தீர்ப்பை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்காக 65,000 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில், கொழும்பு வடக்கு காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (18) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நீதிமன்றத்தின் செயலாளராக நீதிபதியின் மனைவி பணியாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விவாகரத்து வழக்கின் தீர்ப்பைத் தாமதமின்றி விரைவாக வழங்குவதற்காக இருவரும் இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதியையும் அவரது மனைவியையும் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments