Home புதினங்களின் சங்கமம் வெளிநாட்டிலிருந்து வந்த 32 வயது தமிழ் பெண் போதை மருந்து ஏத்தி மயங்கச் செய்து கூட்டு...

வெளிநாட்டிலிருந்து வந்த 32 வயது தமிழ் பெண் போதை மருந்து ஏத்தி மயங்கச் செய்து கூட்டு வல்லுறவு! நகைகளும் கொள்ளை! 4 காவாலிகள் தேடப்படுகின்றார்கள்!

சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு, பெரும் கனவுகளுடன் தாயகம் திரும்பிய 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் திட்டமிட்டுக் கடத்தப்பட்டு, காவாலிகளால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளார்.

இத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது.

நண்பியின் பொதியை (பார்சல்) ஒப்படைப்பதற்காகச் சென்ற இப்பெண், வாடகை வாகனச் சாரதி மற்றும் அவனோடு இணைந்த காவாலிக்க கும்பலால் போதைப்பானம் கொடுக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையிலேயே இந்த பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அத்தோடு அவரிடமிருந்த 13 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், குறித்த பெண் பலரால் வல்லுறவுக்கு  உள்ளாக்கப்பட்ம நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் வீசப்பட்டுள்ளார்.

மயக்கமடைந்த நிலையில் இருந்த குறித்த பெண், காவல்துறையினரால் மீட்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நினைவு திரும்பியதைத் தொடர்ந்து வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சியில் வைத்து இக் காமுகர்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதில் உள்ள பேராபத்துகள் குறித்தும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments