Home புதினங்களின் சங்கமம் கலியாணம் கட்டி 17 நாள்!! 34 வயது கணனிப் பொறியியலாளர் உட்பட 4 பேர் நீரில்...

கலியாணம் கட்டி 17 நாள்!! 34 வயது கணனிப் பொறியியலாளர் உட்பட 4 பேர் நீரில் மூழ்கிப் பலி!!

மாத்தறை – தெனியாய, கெலே தொல (Kele Dola) பகுதியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் திடீர் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காணாமல் போன அவர்களின் சடலங்கள் பின்னர் கடற்படை மற்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்கள் குழுவினர் சுற்றுலா சென்றிருந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் 34 வயதுடைய பிஷான் பிரபாத்வர என்பவரும் ஒருவர். களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றிய இவர், கடந்த மாதம் 21ஆம் திகதியே திருமண வாழ்க்கையில் இணைந்திருந்தார்.

திருமணமாகி வெறும் 17 நாட்களிலேயே இவ்வாறான துயரத்தைச் சந்தித்துள்ளமை பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments