கோப்பாய் பொலிஸாரால் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இருவரை கோப்பாய் பொலிஸார் சோதனையிட்ட போது, ஐஸ் போதைப் பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்திய போது நீதவான் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





