பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான மனோஜ் முத்துகுமாரண பிரியதர்ஷன என்றழைக்கப்படும் ‘கைவாரு முத்து’ என்பவரை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை (06.11.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலையக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடுவெல, கொரதொட்ட வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இவர், அப்பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபராவார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்றிருந்ததுடன், அங்குள்ள பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவராவார்.
அந்நாட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 01.50 மணியளவில் எயார் அரேபியா விமானச் சேவையின் G9-587 என்ற இலக்கக் கொண்ட விமானம் மூலம் அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.




