Home புதினங்களின் சங்கமம் யாழில் தாய் மற்றும் மாமாவின் அழுகிய சடலங்களுடன் 3 நாட்களாக வாழ்ந்த பெண்! அதிர்ச்சி தகவல்கள்...

யாழில் தாய் மற்றும் மாமாவின் அழுகிய சடலங்களுடன் 3 நாட்களாக வாழ்ந்த பெண்! அதிர்ச்சி தகவல்கள் இதோ! Video

யாழ்ப்பாணத்தில் தனது தாய் மற்றும் மாமனின் சடலங்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் வசித்து வந்த பெண்ணொருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் , சடலங்களையும் பொலிஸார் மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்

வேலணை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 74) அவரது சகோதரியான முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 72) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்
சடலங்களாக மீட்கப்பட்ட பாலசுந்தரம், அவரது சகோதரியான புவனேஸ்வரி ஆகியோருடன் , புவனேஸ்வரியின் மகளான 45 வயதுடைய பெண்ணும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதனை அடுத்து , அயலவர்கள் குறித்த வீட்டிற்கு சென்ற வேளை வீட்டினுள் ஒருவரும் மற்றையவர் வீட்டின் வெளியுமாக இருவரும் வெவ்வேறு இடங்களில் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை வீட்டில் இவர்களுடன் வசித்து வந்த புவனேஸ்வரியின் மகள் அதேவீட்டில் இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வீட்டில் வசித்து வந்த புவனேஸ்வரியின் மகள் சித்த சுவாதீனமற்றவர் என தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு ஏதுவாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் , சட்டவைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வீட்டினுள் காணப்பட்ட புவனேஷ்வரியின் சடலம் மிக உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதுடன் ,  வீட்டின் வெளியே காணப்பட்ட பாலசுந்தரத்தின் சடலம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்க கூடிய சாத்திய கூறுகள் காணப்பட்டுள்ளன.
சடலங்களை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணங்களை உறுதியாக கூற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments