Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் குடும்ப பெண்ணை கதிரையில் இருத்தி சீரழித்து பெற்றோல் ஊற்றி எரித்து கொலை!

மட்டு’வில் குடும்ப பெண்ணை கதிரையில் இருத்தி சீரழித்து பெற்றோல் ஊற்றி எரித்து கொலை!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த பெண் ஒருவர் மீது உறவினர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலையில் பெற்றோலை ஊற்றி தீ வைத்ததில் அவர் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இது பற்றி தெரியவருவதாவது; குறித்த பெண் சம்பவ தினமான 3ம் திகதியான செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் கதிரையில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

இதன் போது அவருக்கு தெரியாமல் வீட்டின் பின் பகுதியால் சென்ற அந்த பெண்ணின் உறவினரான ஆண் ஒருவர் அந்த பெண் மீது பெற்றோலை ஊற்றி தீயிட்டதையடுத்து அவர் தீப்பற்றிக் கொண்டார் இதனையடுத்து குறித்த பெண் சத்தமிட்டதையடுத்து அருகிலுள்ளவர்கள் சென்று தீயை அனைத்து காப்பாற்றி படுகாயமடைந்த அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தீயிட்டவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து தலைமறைவாகி இருந்த குறித்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவரான அவரை புதன்கிழமை (4) திகதி கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை 5ம் திகதி காலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments