Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசர அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசர அறிவிப்பு!

யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளில் வசிக்கும், 36 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள் யாழ்ப்பாண நகருக்கு வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பருவ மழையினால் ஏற்படும் அனர்த்தங்கள்
பருவமழையினால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வது, அனர்த்த அபாயங்களைக் குறைப்பது மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான உத்திகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

கர்ப்பவதிகளுக்கான அறிவிப்பு
இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் 331 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு போன்ற தீவுப் பகுதிகளில் வசிக்கும், 36 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள், யாழ்ப்பாண நகரில் உள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்துறை (Kayts) வைத்தியசாலையிலோ தங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மோசமான வானிலை நிலவும் காலங்களில் கடல்வழிப் பயணத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கருத்தில் கொண்டே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனர்த்த காலத்திலும் குறித்த கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாகப் பிரசவம் பார்ப்பதை உறுதி செய்ய முடியும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments