Home புதினங்களின் சங்கமம் கனடாவிலிருந்து இலங்கைக்கு யாழ் இளைஞன் லக்சிகன் நாளை நாடுகடத்தப்படவுள்ளார்! எதற்காக.

கனடாவிலிருந்து இலங்கைக்கு யாழ் இளைஞன் லக்சிகன் நாளை நாடுகடத்தப்படவுள்ளார்! எதற்காக.

கனடாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் நாளையதினம் நாடு கடத்தப்படவுள்ளார். லக்சிகன் புனிதராசா என்பவரையே கனடா அரசு நாடுகடத்த உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பல் மூலம் கனடாவிற்கு வந்த ஈழத் தமிழ் அகதியான துரைசிங்கம் (Thuraisinkam) உள்ளிட்ட சிலரது நாடு கடத்தல் உத்தரவுகளுக்கு கனடா ஃபெடரல் நீதிமன்றம் (Federal Court) தற்காலிக இடைக்காலத் தடை (Stay of deportation) விதித்தது

இவரது அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் நாடுகட்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் நாடு கடத்தப்படவுள்ளீர்கள் என இன்று அதாவது நாடு கடத்த ஆறு மணிநேரம் இருக்கும் நிலையில் கனடா எல்லைச் சேவைகள் நிறுவனம் அவருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

அத்துடன் அவர் நாடு கடத்தப்படுவதை எளிதாக்கும் வகையில் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments