இலங்கையில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் தொடர்பான செயற்பாடுகளைக் கவனிக்கும் தேசிய நிறுவனமான புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் (Geological Survey and Mines Bureau – GSMB) வட மாகாண பிராந்திய அலுவலகத்தில் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்களுக்கு மேலாக மேலதிகாரியாகக் கடமையாற்றிய எந்திரி டி.மயூரன் இடமாற்றப்பட்டுள்ளான்.
வடபகுதியில் நடைபெற்ற முக்கிய மண்கடத்தில் மாபியாக்களின் பிரதான செயற்பாட்டாளரா இவனே இருந்து வந்துள்ளான். மகேஸ்வரி நிதியம் என்ற பெயரில் யாழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் டக்ளஸ் கூட்டத்தால் பெருமளவான மண் அகழ்ந்தெடுக்கப்பட்டமை தொடங்கி வன்னி நிலப்பரப்பில் கிரவல் மண் அகழ்வு மற்றும் ஏனைய கனிய வளங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் இவனே.
இவன் மனது வைத்திருந்தால்தான் யாழ்ப்பாணத்திலிருந்தோ அல்லது வடக்குப்பகுதியில் இருந்தோ கனிய வளங்கள் வாகனத்தில் ஏற்றலாம் என்ற நிலை இருந்துள்ளது. மிகவும் நுட்பமாக தனது பெயர் வெளியே தெரியாதவாறு இவன் பெருமளவு ஊழல் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கொழும்பின் முக்கிய இடங்களில் இவனுக்கு மிகப் பெறுமதியான சொகுசு வீடுகள் உள்ளதாகவும் பெருமளவு சொத்துச் சேர்த்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறான ஒரு அதிகாரியை சாதாரணமாக இடமாற்றம் செய்து இவனது ஊழல்களை மூடிமறைக்க தற்போதைய அரசு முயற்சி செய்கின்றதா?





