வெளிநாட்டு கனவு… மாபியாவிடம் சிக்கிய மன்னார் இளைஞன்!
துபாயிலிருந்து லிபியாவுக்கு கடத்தப்பட்டு 3 மாதங்கள் வீட்டு சிறையில்!
“After Payment” எனக் கூறி குடும்பத்தினரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பு!
இங்கிலாந்துக்கு அனுப்புவதாகக் கூறி மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை துபாயிலிருந்து லிபியாவுக்கு கடத்திச் சென்று மாபியா குழு ஒன்று கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆரம்பத்தில் tiket மற்றும் விசாவுக்கு மத்திரம் பணம் பெற்று கொண்டு மிகுதி “After Payment” எனக் கூறி இளைஞனை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளனர் துபாயில் இருந்து குறித்த இளைஞனை லிபியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
லிபியாவுக்குச் சென்ற பின்னர் இளைஞன் அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாகவும், அவரை உயிருடன் விடுவிக்க வேண்டும் எனில் பணம் வேண்டும் என குடும்பத்தினரை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மாதங்களாக இளைஞன் சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை உயிருடன் மீட்பதற்காக குடும்பத்தினர் பெருந்தொகையான பணத்தை வழங்கியுள்ளனர்
அவரை போல் மேலும் 8 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு வீட்டு சிறையில் இருப்பதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆரம்பித்த பயணம், இறுதியில் இளைஞனின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், குடும்பத்தினருக்கு பெரும் நிதி இழப்பாகவும் மாறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இடம்பெறும் இவ்வாறான மோசடிகள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணம் வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வெளிநாட்டு கனவு… நம்பி ஏமாறாதீர்கள்!





