Home புதினங்களின் சங்கமம் அவதானம் பெற்றோரே! மட்டு’வில் நீர் நிரம்பிய வாளிக்குள் மூழ்கி 18 மாத ஆண் குழந்தை பலி!

அவதானம் பெற்றோரே! மட்டு’வில் நீர் நிரம்பிய வாளிக்குள் மூழ்கி 18 மாத ஆண் குழந்தை பலி!

மட்டக்களப்பில் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் நேற்று (26) திங்கட்கிழமை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய அக்விவ் விகான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று காலை 11 மணியளவில் குழந்தை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், தாயார் கிணற்றடியில் 20 லீற்றர் கொள்ளளவுடைய பெயின்ட் வாளியில் தண்ணீர் வைத்து ஆடைகளைத் துவைத்து, அவற்றைக் கொடியில் காயவிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது உறக்கத்திலிருந்து எழுந்த குழந்தை தாயார் இருந்த பகுதிக்கு வந்துள்ளது.

குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக ஆடைகளை எடுக்கத் தாயார் வீட்டின் அறைக்குச் சென்று திரும்பியபோது, குழந்தை தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தலைகுப்புற விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாகக் குழந்தையை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.ஒரு கணப்பொழுதில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments