மிருசுவில் வடக்கு பிரதேசத்தில் திருஞானம் சிவசிறி எனப்படும் கள்ள மண் சிறி பக்கத்துவீட்டில் வாழும் 19 வயதான யுவதியை கர்ப்பமாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த யுவதி சிறு வயது முதலே இவனை அண்ணா.. அண்ணா என அழைத்துக் கொண்டு பின்னும் முன்னும் திரிந்தவள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
குறித்த யவதியின் வயிற்றுப் பகுதி பெரிதாகுவதைக் கண்டு சந்தேகமடைந்த உறவுகள் அவளை வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போது நிறை மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இதனையடுத்து சிறி தற்போது தலைமறைவாகி உள்ளான்.
தற்போது அந்த பெண்ணையும் பெண்வீட்டாரையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றான்.
சிறியின் சகோதரி, மற்றும் தாயாரால் குறித்த யுவதிக்கு தமது மகன் (சிறி) இல்லாமல் வேறு யாரையாவது தான் காரணம் என்று சொல்ல சொல்லி மிரட்டி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இவனுக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல், ஆனால் பாவம் குழந்தைகள் இல்லை. மனைவி ஓர் பட்டதாரியான அப்பாவி பெண்.
பார்ப்பதற்கு அப்பாவியான தோற்றமுடைய இவன் தினமும் கசிப்பு, வடிசாராயம், கள் போன்றவற்றை குடித்து மனைவியை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், ஆடு,மாடு, மண் கடத்தல் போன்றவற்றில் கைதேர்ந்தவன் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
Tractor, JCB, நெல்வெட்டு இயந்திரம் போன்றன இவனிடம் உள்ளதாகவும் ஆனால் கள்ளமண் கடத்தலே இவனதுவே பிரதான தொழில் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பெண் வீட்டார் ஓர் பின்தங்கிய அப்பாவி குடும்பம். பின்னர் அவர்களின் குடும்பத்துடன் நம்பிக்கையாக பழகிய இந்த அயல் வீட்டு காமுகன் அண்ணா என்ன உறவு முறையை தவறாக பயன்படுத்தி, சந்தர்ப்பத்தினை தவறாக பயன்படுத்தி அந்த பிள்ளையை அம்மாவாக மாற்றியுள்ளான் .
இவனது மனைவி ஓர் வேலையில்லா பட்டதாரி. இவனுடைய சகோதரனும் ஓர் அரச உத்தியோகத்தர் ஆனால் போதை, சிகரெட் இல்லாமல் இருக்கமாட்டான் எனவும் மனைவியை அடித்து சித்திரவதை செய்பவன் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.






