Home புதினங்களின் சங்கமம் சுவிஸ்லாந்தில் இலங்கை தமிழ் யுவதியை துரத்திப் பிடித்த பொலிசார்! நிறை வெறியில் அவள் செய்த ஆபத்தான...

சுவிஸ்லாந்தில் இலங்கை தமிழ் யுவதியை துரத்திப் பிடித்த பொலிசார்! நிறை வெறியில் அவள் செய்த ஆபத்தான செயல் என்ன?

சுஸ்விட்சர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவர், பொலிசாரினால் மறிக்கப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை 7:15 மணியளவில், மார்ச்சின்கன் பகுதிக்கு அருகிலுள்ள A1 அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காரின் ஆபத்தான இயக்கத்தைக் கவனித்த தர்காவ் மாகாண பொலிசார், உடனடியாக வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது சாரதியாக இருந்த 20 வயது இலங்கைப் பெண்ணின் மூச்சில், மதுவாடை வீசியதுடன் பரிசோதனையில் அவரது உடலில் ஒரு லிட்டருக்கு 1 மில்லிகிராம் அளவுக்கு மது இருந்தது கண்டறியப்பட்டது.

ஸ்விட்சர்லாந்து சட்டப்படி ஒரு லிட்டருக்கு 0.40 மில்லிகிராம் என்ற அளவே கடுமையான எல்லையாகும். ஆனால் இலங்கை யுவதி அதைவிட மிக அதிகமாக, தோராயமாக 2.2 மில்லிகிராம் அளவுக்கு மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து துல்லியமான இரத்த பரிசோதனைக்கு உத்தரவிட்ட பொது ஆளுநர் அலுவலகம், கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மது அறிந்துவிட்டு எப்போதுமே வாகனம் ஓட்டாதீர்கள். பொதுப்போக்குவரத்து, டாக்சி அல்லது மது அருந்தாத நண்பர்களை பயன்படுத்துங்கள். பாதுகாப்பான பயணம் நம் அனைவரின் கைகளிலுமே உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments