Home புதினங்களின் சங்கமம் அநுராவின் ஆட்சியை கைப்பற்ற சூனிய பேய் ஏவப்பட்டது! கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் பிக்குகள் செய்த...

அநுராவின் ஆட்சியை கைப்பற்ற சூனிய பேய் ஏவப்பட்டது! கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் பிக்குகள் செய்த செய்வினை பூசை!

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (20) மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய தெய்வங்களை வேண்டி, புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சி பலவீனமடைந்து, நாட்டில் அறநெறிசார் ஆட்சி அமைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் வேண்டி, சூனியச் சடங்குகளுடன் கூடிய பூஜைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments