Home புதினங்களின் சங்கமம் 15 வயது மாணவி துஸ்பிரயோகம்! தனியார் கல்வி நிலைய ஆசிரியர் கைது!

15 வயது மாணவி துஸ்பிரயோகம்! தனியார் கல்வி நிலைய ஆசிரியர் கைது!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர்.

அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments