புதினங்களின் சங்கமம்

2 பெண்களுடன் அந்தரங்கமாக இருந்த ரவுடி! நேரில் பார்த்து ரகசியமாக வீடியோ எடுத்த மாணவன் குத்திக் கொலை!!

எஹலியகொட பகுதியில் ஞாயிறுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சனிக்கிமை (29) மாலை ஆரப்பொலை பாடசாலைச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் இரு இளம் பெண்களுடன் இருந்தபோது, அதனைப் பார்த்த மாணவன் ஒருவன் அதனை வீடியோ பதிவு செய்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனால் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகும் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று அதிகாலை மாணவனின் வீட்டிற்குச் சென்று, அவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மாணவன் எஹலியகொட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x