புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் தனது கள்ளக் காதலனை தனது பெறாமகளுக்கு பொருத்தி வைத்த சுவிஸ் அன்ரி!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மானிப்பாயை சேர்ந்த 22 வயதான பெண். தனது பக்கவாதம் பாதித்த தந்தை, தாய் மற்றும் ஒரு சகோதரியுடன் வசித்து வருகிறார். நிஷாவின் அப்பாவின் தங்கை வதனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுவிஸ்சில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். அவரின் பண உதவியிலேயே நிஷா வின் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.

நிஷா வீட்டுக்கு அழைப்பெடுத்த அன்ரி, நிஷாவுக்கு தான் சுன்னாகத்தை சேர்ந்த ஒரு பெடியனை பார்த்துள்ளதாகவும் (அவரை லின்ரன் என்று வைத்துக்கொள்வோம்), திருமணம் முடிந்தவுடன் இருவரையும் சுவிஸ் க்கு எடுப்பதாகவும் தெரிவித்து புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அனுப்பியுள்ளார்.

லின்ரன் O/L பெயில் விட்டுவிட்டு FZ இல் பறக்கும் பன்னாடை ஆவார். நிஷாவோ A/L இல் நல்ல மதிப்பெண் எடுத்து சித்திபெற்ற ஒருவராவார். இதனால் நிஷாவின் தாய்க்கு குறித்த சம்மந்தம் பெரிதாக பிடிக்கவில்லை. எனினும் சுவிஸ் அன்ரியின் வற்புறுத்தலால் சம்மந்தக் கலப்பு வரை சென்றிருந்தது.

நிஷாவும் லின்ரனும் தொலைபேசியில் கதைக்கத் தொடங்கியிருந்தனர். ஒருநாள் நன்கு குடித்துவிட்டு தன்னை நிறைய பெண்கள் விரும்புவதாகவும், தான் பாவப்பட்டு உன்னை கட்ட சம்மதித்ததாகவும் கூறியுள்ளார் லின்ரன். நிஷாவும் நம்பாமல் லின்ரனின் உருவம் மற்றும் கறுப்பு நிறத்தை வைத்து கேலிசெய்து மறுக்கவே, கோபமடைந்த லின்ரன், நான் உன் அத்தைவே வச்சு இருக்கிறன் என்று தனக்கும் சுவிஸ் அன்ரிக்கும் இடையிலான கள்ளத்தொடர்பை போட்டு உடைத்துள்ளார். அதை நிரூபிக்கும் வகையில் Chat Screenshot மற்றும் அன்ரியின் சில அந்தரங்கப் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

அதிர்ச்சியான நிஷா, தனது தந்தை, தாயிடம் விடயத்தை கூறி கதறி அழுதுள்ளார். கோபமடைந்த தந்தை சுவிஸ் அன்ரிக்கு அழைப்பெடுத்து ஏசவே, அழைப்பை துண்டித்தார்.

சமவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், தற்போது நிஷாவின் குடும்பத்துக்கு பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளாராம் சுவிஸ் அன்ரி. இதனால் நிஷாவின் குடும்பம் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கள்ளக்காதலனை பெறாமகளுக்கு கட்டி வைத்து, அதை சாட்டி கள்ளக் காதலனை சுவிஸ் க்கு எடுத்து தனது கள்ளக் காதலை தொடர நினைத்த அன்ரியின் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நிஷாவின் தாய்வழி உறவினர்கள் மூலம் வெளி உலகிற்கு வந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x