புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து வ்வுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் தங்கச்சியுடன் அதி வேகமாகச் சென்ற இளைஞன் பலி! சகோதரிக்கு நடந்த கதி!

புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்!

வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்க்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அவரது சகோதரி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x