புதினங்களின் சங்கமம்

அதிவேகம்!! காருடன் மோதிச் சிதறி எரிந்த மோட்டார் சைக்கிள்!! வர்த்தகரின் மகன் பலி!! வீடியோ

நேற்று (23) கந்தளாய் கித்துலூத்து பகுதியில் இடம்பெற்ற விபத்தில் Paththirana Super உரிமையாளரின் 27 வயது மகன் உயிரிழந்துள்ளார். அதி வேகமாகச் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதியே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
.
.
திருகோணமலையில் இருந்து கபரணை நோக்கி வெளிநாட்டவர் பயணித்த கார் ரக வாகனமும் கபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த உயர் ரக மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி வியத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (22) மாலை கபரணை வீதியில் கித்துலூத்து 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் இந்தியாவில் வருகைதந்த கணவன்இ மனைவி ஆகியோரே பயணித்துள்ளதாகவும் கணவன் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மனைவி விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி துண்டு துண்டாக சிதறி எரிந்து நாசகாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்லோயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of one or more people, fire, road and textMay be an image of one or more people, car and roadNo photo description available.May be an image of van and carMay be an image of turtleMay be an image of van, car, road and textMay be an image of car, jeep and roadNo photo description available.May be an image of fireMay be an image of fire and roadMay be an image of road

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x