அருச்சுனா அந்த மாதிரி நேரங்களில் ஆண் உறை அணிவதில்லையா? என்னடாப்பா இது?வீடியோ
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை அணிய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
படகுப் பயணத்தின் போது, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அனைத்துப் பயணிகளும் உயிர்காக்கும் கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அங்கியை அணிய மறுத்து ராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதம் ; கடுப்பான பயணிகள் | Archchuna Mp Argue Over Wearing The Robe Boat
எனக்கு நீந்தத் தெரியும்…
மற்ற அனைத்துப் பயணிகளும் இதற்கு இணங்கிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும், தனக்கு நீந்தத் தெரியும் என்றும், எனவே தனக்கு அந்தக் கவசம் தேவையில்லை என்றும் கூறி அணிய மறுத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாகப் பயணம் தாமதமடைந்ததுடன், அதிருப்தியடைந்த பயணிகள் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பாதுகாப்பு விதிகளுக்கு முன்னுதாரணமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர்காக்கும் அங்கியை அணிந்த பின்னரே படகுப் பயணம் தொடரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் அர்ச்சுனா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது

