முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் வாகனம் விபத்து.! வீடியோ
முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு பகுதியில் இன்று (30) பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்து நடந்ததாக கூறப்படுகின்றது. இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிசார் சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





