புதினங்களின் சங்கமம்

ஓமந்தை ஏ9 வீதியில் கொடூர விபத்து!! 3 பேர் பலி!! பலர் படுகாயம்!! வீடியோ

வவுனியா – ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் நேருக்கு நேர் மகேந்திரா ரக வாகனமும், கனரக வாகனமும் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டியில் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு விசுவமடு நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரா ரக வாகனமும், யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of skateboardMay be an image of 5 people, lighting and crowdNo photo description available.No photo description available.