புதினங்களின் சங்கமம்

பரந்தன் வாகன விபத்தில் பட்டதாரி மாணவி யதுகிரி பரிதாபகரமாகப் பலி!! Photos

பரந்தன் இந்துவின் பழைய மாணவியும் பல்கலைக்கழகம் முடித்து எதிர்காலக் கனவுகளை சுமந்து பயணித்த. சந்திரசேகரம் யதுகிரி காலை விபத்தில் அகாலமரணமானார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று வியாழக்கிழமை (31) காலை இடம்பெற்ற விபத்தில்  சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி உந்துருளியில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 person, scooter, dirt bike, motorcycle and text that says "BDC" 佛 BDC 7765 NP"May be an image of 8 people and text