உள்ளூராட்சி தேர்தலுக்காக நாடு யாருடனாவது இருக்கட்டும் ஊர் எம்முடன் இருக்கட்டும் என நரம்பு புடைக்க அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய தரப்புக்கானது….
யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகிறது இத்தனை ஆண்டுகளும் ஊர் யாருடன் இருந்தது ?
உள்ளூராட்சி சபைகளினதும் மாகாண சபையினதும் கதிரைகளை சூடாக்கி தமக்குள் அடிபடுவதும்… ஆளையால் ஊழல் பழி சூட்டுவதும்…. துரோகி பட்டம் கொடுப்பதும் …. நம்பிக்கை இல்லா தீர்மானங்களும்…. வரவு செலவு தோற்கடிப்புகளும்…. என நிர்வாகத்தை சீரழித்து ஆகக்குறைந்தது மக்கள் வரிப்பணத்தை கூட முறையாக செலவிட துப்பில்லாத சபைகளாக மாற்றிய தமிழ்த்தேசிய தரப்புக்கானது….
அரசியல் தீர்வை விடுங்கள் ஆகக்குறைந்தது உள்ளூர் மக்களுக்கான அடிப்படை வசதிகளையாவது செய்தீர்களா ?
இருக்கும் அதிகாரத்தை கூட பயன்படுத்த வக்கற்ற உங்களுக்கு சமஷ்டி ஓர் கேடு….
ஏன் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இவ்வாறான காவாலிகள் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது எனும் அடிப்படை கேள்வியை நாம் சிந்திக்கிறோமா ?
தமிழர்களின் தலைவர்களாக மார் தட்டிக்கொள்ளும் உங்களால் போருக்கு பின்னரான இனத்தின் சமூக மேம்பாட்டுக்காக ஆகக்குறைந்தது ஓர் பொது நிதியத்தையாவது கட்டமைக்க முடிந்ததா ? ஏன் அதற்கும் சிங்கள பேரினவாதம் மீது பழியை போடுகிறீர்களா ?
உங்களின் அரசியலுக்கு மக்களின் வறுமை தேவைப்படுகிறது… புலியை வைத்து உணர்ச்சி அரசியல் செய்வீர்கள் ஆனால் போராடி களைத்து இன்று வறுமையில் வாடும் போராளிகளையோ அல்லது மாவீரர் பெற்றோர் நல வாழ்வை பற்றியோ சிந்திக்க மாட்டீர்கள் ….
எமது மக்கள் மீது கரிசனை கொண்ட புலம்பெயர்ந்த நன்கொடையாளர்களை பழிப்பதை விடுத்து நமது தேசத்தை கட்டமைப்பதற்கான இவ்வாறான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதே எதிர்காலத்தில் இவ்வாறான காவாலிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளியை வைக்கும்….
அன்புடன்,
யதார்த்தவாதி வெகுஜனவிரோதி





