ஆர்றா நீ? பேயா பைத்தியமா நீ? சரிடா கள்ளா! நாங்கள் தான் பைத்தியம்!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
– தையிட்டி விகாரைக்குரிய தூபிக்கு இராணுவத்தளபதி அடிக்கல் நாட்டியது எப்ப?
• 2021 இல்..
– மக்கள் போராட்டம் செய்யக்கூடிய நிலவரம் இருந்ததா?
• இல்லை, பெருந்தொற்றுக்காலத்தில் செய்தார்கள்.
– விகாரைக்குரிய காணியில் ஒரு வடக்கு மாகாண ஆளுநர் அடிக்கல் நாட்டியது எப்ப எண்டு தெரியுமா?
• 2017 ல்
– சரி சொல்லு, தையிட்டி விகாரைக்கு எதிராக போராடுற மக்கள் என்ன செய்யலாம்?
• வழக்கு போட வேண்டிய தானே??
– செம்மலை பிள்ளையார் கோயில் வளாகத்தில வசித்த பிக்கு இறந்த போது முல்லைத்தீவு நீதிமன்றம் என்ன உத்தரவிட்டது?
• செம்மலை கடற்கரையில் தகனம் செய்ய அனுமதிச்சு!
– எங்க தகனம் செய்தவங்கள்?
• பிள்ளையார் கோயில் கேணிக்குள்ள..
– வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சபையினர் இப்ப எங்க?
• போராடின சபையினர் விசாரணை விரக்தியில பதவி விலகிட்டாங்க!
– குருந்தூர்மலை ஐயன்கோயில் சூலம் கழற்றியெறியப்பட்ட போது, முல்லைத்தீவு நீதிமன்றம் என்ன கட்டளை ஆக்கியது?
• எம்மதத்தினரும் கட்டுமானம் செய்யத்தடை!
– நடந்ததா?
• இல்லை இராணுவ பாதுகாப்புடன் முழு விகாரையும் கட்டி முடிக்கப்பட்டது.
– கன்னியா சைவக்கோயிலுக்கு போன அகத்தியரடிகளுக்கு என்ன நடந்த?
• பிக்கு தேத்தண்ணியால ஊத்தினவர்!!
– முல்லைத்தீவு நீதிபதி இப்ப எங்க?
• நாட்டில பாதுகாப்பு இல்லையெண்டு வெளிநாட்டில..
– வவுனியா நீதிபதி எங்க?
• ஓய்வு பெற்றிட்டார்,
நீடிக்கப்பட வேண்டிய உத்தரவு – வேண்டுமென்று தாமதிக்கப்பட்ட எண்டு பிரியாவிடையில பேசியிருக்கிறார்.
– இப்ப சொல்லு தையிட்டி விகாரைக்கு எதிராக போராடுற மக்கள் என்ன செய்யலாம்?
• வழக்கு!! வழக்குத்தான் ஒரே வழி!
– ஆர்றா நீ?
• 2015 முதல் 2018 வரை ‘ஹெலீல பைல் காவின மாமா’வின்ர மருமக்கள் நாங்கள்!
– பேயா பைத்தியமா நீ?
• அப்பிடித்தான் நடிப்பம்,
2017 தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டின கவர்னரை கேட்டு வாங்கினதே நாங்கள் எண்டதையும் – வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள் பட்ஜெட்டுக்கு நாங்கள் கையுயர்த்தினதையும் – நீங்கள் மறந்திட்டியள்!!
அப்ப ஆர் பைத்தியம்??
– சரிடா கள்ளா!
நாங்கள் தான் பைத்தியம். 🤬🙏🏽

