Home புதினங்களின் சங்கமம் பக்கத்து வீட்டு சாமத்தியச்சடங்குக்கு வந்தவன் 2 பிள்ளைகளின் தாயுடன் உறவு கொள்ள முயற்சி! தும்புக்கட்டையால் அடித்த...

பக்கத்து வீட்டு சாமத்தியச்சடங்குக்கு வந்தவன் 2 பிள்ளைகளின் தாயுடன் உறவு கொள்ள முயற்சி! தும்புக்கட்டையால் அடித்த மகன்!!

வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயை வன்புணர்வதற்கு முயன்ற ஒருவரை தேடி, வலைவிரித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்திக்கும்புர, அந்தாயம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஈச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவன், கொழும்பு பிரதேசத்தில் வேலைச்செய்துவருகின்றார். தன்னுடைய பிள்ளைகள் இருவருடன், அயலில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்த அப்பெண், அன்றிரவு 10 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கட்டிலில் படுக்கச்சென்ற அப்பெண், கட்டிலுக்கு அருகில் உள்ள நாற்காலியில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதை அவதானித்தார்.

அச்சமடைந்த அந்த பெண், கூச்சலிடமுயன்றபோது, பாய்ந்துபிடித்த அந்தநபர், பெண்ணின் வாயை பொத்தி, கழுத்தை நெரித்து, சத்தம்போட்டால், கொலை​ச்செய்துவிடுவேன் என அச்சுறுத்தி, பாலியல் வன்புணர்ந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் மகன், பக்கத்து அறையில் இருந்து தும்புத்தடியை எடுத்துவந்து தாக்குவதற்கு முயன்றபோது, பின்கதவால் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

அந்த மர்ம நபர், பூப்புனித நீராட்டு விழாவுக்கு வருகைதந்தவர் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த மொனராகலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.