Home புதினங்களின் சங்கமம் யாழில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் வீட்டில் கொள்ளையன் புகுந்த காட்சிகள்!! வீடியோ

யாழில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் வீட்டில் கொள்ளையன் புகுந்த காட்சிகள்!! வீடியோ

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை (12) மாலை திருடன் கைவரிசை காட்டியுள்ளான்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.

பிற்பகல் 4 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன்போது திருடிச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.