Home புதினங்களின் சங்கமம் திருகோணமலையில் இரு குடும்பங்களுக்கிடையேயான காணிச் சண்டை!! இருவர் பலி!! இருவர் படுகாயம்!!

திருகோணமலையில் இரு குடும்பங்களுக்கிடையேயான காணிச் சண்டை!! இருவர் பலி!! இருவர் படுகாயம்!!

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான வயல் காணிச் சண்டையின் போது இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கிறனர்.

இச்சம்பவம் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை புல்மோட்டை பாலம்குளம் பகுதியிலே இச்குடும்பசண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் போது சலீம் மற்றும் வதூத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை புல்மோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.