புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

விவாகரத்தான ஜேர்மனி தமிழ்ப் பெண்ணை கலியாணம் செய்து தாறேன் என கூறி 10 லட்சம் மோசடி செய்த யாழ்ப்பாண புறோக்கர்!!

யாழில்கலியாண புறோக்கர் ஒருவரிடம் 10 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார் 27 வயதான தனியார் நிறுவன ஊழியர் . ஜேர்மனியில் நிரந்தர வதிவிடம் உள்ள யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட 31 வயதான விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை என பேஸ்புக் பக்கம் ஒன்றில் வந்த பதிவை நம்பியே குறித்த இளைஞன் ஏமாந்துள்ளார். புறோக்கரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட இளைஞனிடம்  புகைப்படம் பெற்ற புறோக்கர் இரு நாட்களின் பின் தொடர்பு கொண்டு பெண்ணுக்கு புகைப்படம் பிடித்துள்ளது . அத்துடன் ஜாதகமும் பொருந்தியுள்ளது . ஆகவே பெண் உங்களுடன் தொடர்பு கொள்ள ஆசைப்படுகின்றார் என கூறி அப்பெண்ணின் புகைப்படம் என தெரிவித்து சில அழகான புகைப்படங்களையும் இளைஞனுக்கு வைபரில் அனுப்பிய புறோக்கர் இளைஞனிடம் பெண்ணின் பேஸ்புக் என தெரிவித்து ஒரு பேஸ்புக் கணக்கையும் அனுப்பியுள்ளார். அந்த கணக்கின் மெசேஞ்சரில் இருந்து குறித்த இளைஞனுடன் ஜேர்மன் பெண் என கூறி பெண் ஒருவர் கதைத்ததால் இளைஞன் புறோக்கரை முற்றாக நம்பி புறோக்கர் ஏற்கனவே  கேட்ட 10 லட்சம் ரூபாவை புறோக்கரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளார். இதன் பின் ஓரிரு நாட்களில் புறோக்கரின் பேஸ்புக் மற்றும் தொலைபேசி இலக்கமும் பெண்ணின்  பேஸ்புக் கணக்குகளும் செயலற்றுப் போயின. இதனால் அதிர்ச்சியுற்ற இளைஞன் தற்போது பொலிசில் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.