Home புதினங்களின் சங்கமம் இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 177 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.