Home புதினங்களின் சங்கமம் யாழ் கவுனாவத்தையில் வேள்விக் கிடாய் வெட்டிய சந்தேகத்தில் பொலிசார் செய்த வேலை!!

யாழ் கவுனாவத்தையில் வேள்விக் கிடாய் வெட்டிய சந்தேகத்தில் பொலிசார் செய்த வேலை!!

 

யாழில் மிகவும் பிரபலமாக பிரமாண்டமான வேள்வி நடைபெறும் கோவிலான கவுனாவத்தை வைரவர் கோவிலில் நேற்று வேள்வி நடைபெறும் தினமாகும். அங்கு வேள்வி நடைபெற அனுமதி கொடுக்கப்படாத காரணத்தாலும் பொதுமக்கள் அங்கு பெருமளவில் கூடுவார்கள் என்பதாலும்  நேற்று முதல் அப்பகுதியில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் அப்பகுதியில் சில வீடுகளில் மக்கள் தாம் வளர்த்த வேள்வி ஆடுகளை சோடனை செய்ததுடன் ஆடு நின்ற பகுதியையும் மின்விளக்குகளால் அலங்கரித்தும் வைத்திருந்தனர். இதனைப் பார்வையிடுவதற்காக அப்பகுதிகளுக்கு  சிலர் செல்லத் தொடங்குவதை அவதானித்த பொலிசார் அங்கு விரைந்து சென்ற போது அப்பகுதியில் நின்றவர்கள் தமது  மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு தலை தெறிக்க ஓடியுள்ளனர். இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களின் திறப்புகளைப் பொலிசார் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் இன்று அதிகாலை முதல் அப்பகுதியால் செல்பவர்களை மறித்து அவர்களின் பைகள் மற்றும் பொதிகளை கடுமையாக பரிசோதித்துள்ளார்களாம். அப்பகுதியில் எங்காவது வேள்வி ஆட்டை வெட்டி இறைச்சியை மறைத்துக் கொண்டு போவார்கள் என்ற சந்தேகத்திலேயே இவ்வாறு பொலிசார் பரிசோதித்ததாக அப்பகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.