Home புதினங்களின் சங்கமம் சற்று முன் அறிவுப்பு!! அனைத்தும் முடக்கம்!! ஐ.சி இலக்கங்களை கொண்டும் வெளியே செல்ல முடியாது!!

சற்று முன் அறிவுப்பு!! அனைத்தும் முடக்கம்!! ஐ.சி இலக்கங்களை கொண்டும் வெளியே செல்ல முடியாது!!

இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மருந்தகங்கள் உட்பட் அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காலப்பகுதிக்குள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் ஊடாக வெளியே செல்வதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவையாளர்கள் மாத்திரம் குறித்த காலப்பகுதிக்குள் பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தயவு செய்து இந்தத் தகவலைப் பகிர்ந்து ஏனையவர்களுக்கும் தெரிவிக்கவும்…