முந்தலில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஒருவரை கைது செய்த பொலிஸ் அதிகாரி முதல் விசாரணை செய்த நீதவான் வரை அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதே வேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
பொதுஜன பெரமுன சார்பில் வரக்காப்பொல பிரதேசசபையில் தெரிவான ஒருவரே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களை விட இந்தியர் ஒருவரும், பிரான்ஸ் பிரஜை ஒருவரும் தொற்றிற்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று கொழும்பு போதனா வைத்தியசாலை ஒன்றில் கொரணா வைரஸ் நோயாளி ஒருவர் தான் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகை தந்ததை மறைத்துக் கொண்டு வைத்தியசாலையில் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்
அவரது இந்த நடவடிக்கை காரணமாக அந்த விடுதியில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் உட்பட ஏனைய ஊழியர்கள் அனைவரும் ஆபத்தில் உள்ளனர்
அதைவிட அவர்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு (14 நாட்கள்) தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
ஒரு மருத்துவ விடுதி முழுமையாக மூடப்படும் அபாயமும் இனிவரும் நாட்களில் அனுமதிக்கபடும் நோயாளிகளை சரியாக சிகிச்சைக்கு உட்படுத்த முடியாமலும் போகும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் இன்று இரவு கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பதுளை பொது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பந்தரவெலவை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையரான சுற்றுலா வழிகாட்டியுடன் அந்த நபர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபருடன் நெருக்கமாக பழகியவர்களை சங்கிலித் தொடராக தேடியபோது, இந்த இளைஞன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இளைஞன் தனது வீட்டில் ஆரோக்கியமாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (18) பதுளை மாகாண மருத்துவமனையில் கோவிட் 19 பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் நோயாளி கொழும்பில் உள்ள தேசிய காய்ச்சல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
இந்த நோயாளி பதுளையின் முதலாவது கொரோா தொற்றாளர் ஆவார்.
இதே போன்றே இத்தாலியில் இருந்து வருகை தந்தோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல மறுத்தமை.
பரசிற்றமோல் மாத்திரைகளை பாவித்து நோய் நிலையினை மறைத்து விமான நிலையமூடாக தப்பிச் சென்றமை
தனியார் வைத்தியசாலைகளில் நோயை கண்டறிந்த பின்பும் உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் நோய் பரவ காரணமாக இருந்த சந்தர்ப்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன …
ஒழுக்கமான சமுதாயமின்றி நோயை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் …
இவ்வாறு பொறுப்பற்ற சமுதாயத்தில் மருத்துவ சேவை வழங்குனர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதன் பின்விளைவு முழு சமுதாயத்தையும் அழித்துவிடும்.





