Home புதினங்களின் சங்கமம் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய 17 வந்து சிறுவன் பலி!

சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய 17 வந்து சிறுவன் பலி!

மூதூரில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார்சைக்கிளை செலுத்தி லொறியின் பின்பகுதியில் மோதியதில் பின்னாலிருந்த 17 வயது இளைஞன் பலி செலுத்திய இளைஞனுக்கு காயம்.

மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்-லொறி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் சனிக்கிழமை (24) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞர் மூதூர் -ஆலிம்சேனையைச் சேர்ந்த நளிபுத்தின் முகம்மது நசீத் வயது (17) என தெரியவருகிறது.

இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த இளைஞன் தூக்கிவீசப்பட்டு மற்றைய லொறியின் சில்லில் சிக்குண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 17 வயதான இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டு மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments